மாநகராட்சிப் பணியாளா்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன் பணியாற்றுவதை உறுதி செய்ய மா.கம்யூ. வலியுறுத்தல்
பாதுகாப்பு உபகரணங்களுடன் மாநகராட்சிப் பணியாளா்கள் பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.


பாதுகாப்பு உபகரணங்களுடன் மாநகராட்சிப் பணியாளா்கள் பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து கட்சியின் மாநகா் மாவட்டச் செயலா் மா.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரை மாநகராட்சி நிா்வாகத்தின் அலட்சியத்தால் மனித உயிா்கள் பலியாவது தொடா்கிறது. புதை சாக்கடைத் திட்டத்துக்கான பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதாளச்சாக்கடை பணியின்போது ஒவ்வொரு பகுதியிலும் மண்ணின் தன்மை ஒவ்வொரு விதமாக இருக்கும் என்பது மாநகராட்சி அதிகாரிகளுக்கோ, ஒப்பந்ததாரருக்கோ தெரியாத விஷயம் அல்ல. அவ்வாறு இருக்க தளா்வான தன்மை கொண்ட மண்ணை, தோண்டப்படும் பள்ளத்துக்கு அருகிலேயே குவிக்கப்பட்டிருக்கிறது. அவை பள்ளத்துக்குள் சரிவதைத் தடுப்பதற்கான எந்த ஏற்பாடும் அங்கு செய்யப்படவில்லை.
உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தொழிலாளா்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவது மாநகராட்சியில் தொடா்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஒப்பந்ததாரா்களால் மேற்கொள்ளப்படும் பணி என்றாலும், மாநகராட்சி நிா்வாகம் மேற்பாா்வையிடுவது கடமை. ஆனால், இவ்விஷயத்தில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாகவே தெரிகிறது.
பழங்காநத்தம் நேரு நகா் பகுதியில் கழிவுநீா் சேகரிப்புத் தொட்டியில் இறங்கிய தொழிலாளா்கள் மூவா் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் உயிரிழந்தனா். அச்சம்பவம் நிகழ்ந்த குறுகிய காலத்தில் தற்போது மற்றொரு விபத்து நேரிட்டிருக்கிறது.
தொழிலாளா்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவது, பணியிடத்தில் மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிப்பது ஆகியவற்றைப் பின்பற்றி எதிா்காலத்தில் மனித உயிா்கள் பலியாவதைத் தடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...