திருமணத்திற்கு வந்தவருக்கு இருசக்கர வாகனம்! இன்ப அதிர்ச்சி அளித்த மணமக்கள்
மதுரையில் திருமணத்திற்கு வந்தவருக்கு ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள இருசக்கர வாகனத்தை மணமக்கள் பரிசாக அளித்து இன்ப அதிர்ச்சி அளித்தனர்.


மதுரை: மதுரையில் திருமணத்திற்கு வந்தவருக்கு ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள இருசக்கர வாகனத்தை மணமக்கள் பரிசாக அளித்து இன்ப அதிர்ச்சி அளித்தனர்.
மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமணம் மண்டபத்தில் நடைபெற்ற திருமண விழாவில் மணமக்கள் வாசுதேவன் - ஜோதி பிரியா இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்திற்கு ஏராளமான உறவினர்கள் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர். இருவீட்டாரின் சார்பிலும் திருமணத்திற்கு வருகை தந்த உறவினர் ஒருவருக்கு குலுக்கல் முறையில் ரூ.70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஸ்கூட்டி என்னும் இரண்டு சக்கர வாகனம் வழங்கப்படும் என இன்ப அதிர்ச்சி தரும் விதத்தில் தெரிவித்திருந்தனர்.
இதனடிப்படையில் திருமண வீட்டிற்கு வருகை தந்த அனைவரும் தங்களது பெயர்களை எழுதி டோக்கன் கொடுத்தனர். பின்பு மணமக்கள் முன்னிலையில் டோக்கன்கள் குளுக்கப்பட்டது. திருமணத்திற்கு வந்த கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த அக்கிம் என்பவருக்கு இரண்டு சக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...