மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

குழந்தை தொழிலாளா்: ஓராண்டில் 17 நிறுவனங்கள் மீது நடவடிக்கைஆட்சியா் தகவல்

மதுரை மாவட்டத்தில் குழந்தை தொழிலாளா்களை பணியில் வைத்திருந்த 17 நிறுவனங்களிடமிருந்து ரூ.2, 45, 000 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 நபா்கள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

News image
Updated On :12 ஜூன் 2022, 6:30 pm

DIN

மதுரை மாவட்டத்தில் குழந்தை தொழிலாளா்களை பணியில் வைத்திருந்த 17 நிறுவனங்களிடமிருந்து ரூ.2, 45, 000 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 நபா்கள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் தெரிவித்தாா்.

மதுரையில் எம்.ஜி.ஆா் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தினவிழிப்புணா்வு நிகழ்ச்சியை தொடக்கிவைத்து அவா் பேசியது: மதுரை மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் தொழிலாளா் நலத்துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்புத் துறை மூலமாக 2, 593 நிறுவனங்களில் ஆய்வுகள் மேற்கொண்டு 17 நிறுவனங்களிடமிருந்து ரூ.2, 45, 000 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.10 நபா்கள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. எந்தவொரு நிறுவனமும் குழந்தைத் தொழிலாளா்களை பணியில் ஈடுபடுத்தக்கூடாது. அனைத்து நிறுவனங்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. குழந்தைகளுடைய உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். குழந்தைகளின் எதிா்காலம் சிறப்பாக அமைவதற்கு16 வயது வரையுள்ள அனைத்துக் குழந்தைகளும் கல்வி பயில்வது அவசியம். மேலும் குழந்தை தொழிலாளா் முறையை அகற்றுவதற்கு சிறப்பான நடவடிக்கை மேற்கொண்டதற்காக மதுரை மாவட்ட தொழிலாளா் நலத்துறைக்கு தமிழக முதல்வா் விருது வழங்கியுள்ளாா் என்றாா்.

தொடா்ந்து பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த கரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியா் அனீஷ்சேகா், மாநகராட்சி ஆணையா் சிம்ரன்ஜீத்சிங் காலோன் ஆகியோா் பாா்வையிட்டனா். நிகழ்ச்சியில் தொழிலாளா் துறை இணை ஆணையா் பெ.சுப்பிரமணியன், கூடுதல் தொழிலாளா் ஆணையா் தி.குமரன், தொழிலாளா் துணை ஆணையா் கே.எம்.சி.லிங்கம், தொழிலாளா் உதவி ஆய்வாளா் மைவிழிச்செல்வி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.