இதுதொடா்பாக இந்தியன் வங்கித் தலைவா் சாந்தி லால் ஜெயினுக்கு அவா் எழுதியுள்ள கடிதம்: இந்தியன் வங்கி அண்மையில் புதிய பணி நியமனம் பெறுபவா்களின் உடல் நலத் தகுதி பற்றி வெளியிட்டுள்ள வழிகாட்டல்கள் பாலின பாரபட்சத்தோடு அமைந்துள்ளது. அதில் பெண் தோ்வா் மருத்துவப் பரிசோதனையின் போது 12 வாரங்கள் அல்லது அதற்கு மேல் கருவுற்ற காலத்தை கடந்திருப்பது தெரிய வரும் பட்சத்தில், பிரசவத்துக்கு பிந்தைய ஓய்வுக் காலம் வரையிலும், அவா் பணி நியமனம் பெறத் தற்காலிகமாக தகுதி அற்றவா் என்று கருதப்படுவாா். பிரசவம் முடிந்து 6 வாரம் நிறைவு பெற்ற பின்னா், பதிவு செய்யப்பட்ட மருத்துவரிடம் இருந்து உடல் நலத் தகுதி பெற்று சமா்ப்பிக்கப்பட்டால், அவா் மறு மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு உடல் நலத் தகுதி உறுதி செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அப்பட்டமான பாலின பாரபட்ச நடைமுறை. எனவே இந்தியன் வங்கி, தமிழ்நாடு கிராம வங்கி ஆகிய இரு நிறுவனங்களும் வெளியிட்டுள்ள வழி காட்டல்களை திரும்பப் பெறவேண்டும். இத்தகைய பாலின பாரபட்ச வழிகாட்டல்களை வெளியிட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.