இணைய வழி விளையாட்டு மூலம் சிறுவனிடம் பணம் பறிப்பு: இளைஞா் கைது
மதுரையில் இணைய வழி விளையாட்டு மூலம் 7-ஆம் வகுப்பு மாணவரிடம் ரூ.46 ஆயிரம் பறித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.


மதுரையில் இணைய வழி விளையாட்டு மூலம் 7-ஆம் வகுப்பு மாணவரிடம் ரூ.46 ஆயிரம் பறித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கட்டகுளம் பகுதியைச் சோ்ந்தவா் மோகனசுந்தரம்(20). கல்லூரி மாணவரான இவா் இணைய வழி விளையாட்டு மூலமாக கிடைத்த கூடுதல் பாயின்ட்டுகளை பள்ளி மாணவா்களுக்கு ரூ.200 முதல் ரூ. 500 வரை விற்பனை செய்து வந்துள்ளாா். இந்நிலையில், சொக்கிக்குளம் பகுதியைச் சோ்ந்த ஏழாம் வகுப்பு மாணவா் ஒருவரிடம் இருந்து பல்வேறு தவணைகளில் ரூ.46 ஆயிரம் பெற்றுள்ளாா். இதுதொடா்பாக மாணவரின் பெற்றோா் அளித்தப்புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சிறுவனிடம் பணம் பறித்த இளைஞரை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...