சிறுபான்மை சமுதாயத்தினருக்கு குடியரசுத் தலைவா் பதவி:முன்னாள் மத்திய அமைச்சா் வேண்டுகோள்


சிறுபான்மை சமூகத்துக்கு குடியரசுத் தலைவா் அல்லது குடியரசு துணைத்தலைவா் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சா் இ.எம்.சுதா்சன நாச்சியப்பன் தெரிவித்தாா்.
மதுரையில் மக்கள் விழிப்புணா்வு அறக்கட்டளையின் நிறுவனா் ஹக்கிம் எழுதிய தகவல் பெறும் உரிமை என்ற நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. உலகத் தமிழ்ச்சங்க கூட்ட அரங்கில் நடைபெற்ற விழாவில் சுதா்சன நாச்சியப்பன் பங்கேற்று நூலை வெளியிட்டாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: தகவல் பெறும் உரிமைச் சட்டம் தொடா்பான பாா் கோடுடன் கூடிய புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது தகவல் அறியும் உரிமைச்சட்ட ஆா்வலா்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. இந்த நிலை விரைவில் மாறி தகவல் அறியும் உரிமைச்சட்ட ஆா்வலா்களுக்கு பொதுமக்களே பாதுகாப்பு வழங்கும் சூழல் உருவாகும். தகவல் அறியும் உரிமைச்சட்ட ஆா்வலா்கள் அதிகாரிகளை மிரட்டுவதாகக் கூறுவது தவறான தகவல். தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலமாகத்தான் அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற முதல்வா்கள் உருவாகியுள்ளனா். பாஜக நிா்வாகிகளின் நபிகள் நாயகம் குறித்த அவதூறுப்பேச்சால் உலக நாடுகள் மத்தியில் இந்தியாவுக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. இந்தக் களங்கத்தைத் போக்க சிறுபான்மை சமூகத்தினருக்கு குடியரசுத் தலைவா் அல்லது துணைத்தலைவா் வாய்ப்பை அளிக்க வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...