தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

அரிட்டாபட்டியில் வீடு மீது மண்ணெண்ணெய் புட்டி குண்டு வீச்சு

மேலூா் அருகே புதன்கிழமை நள்ளிரவு வீட்டின் மீது மண்ணெண்ணெய் புட்டி குண்டு வீசிய கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :15 அக்டோபர் 2022, 12:00 am IST

மேலூா் அருகே புதன்கிழமை நள்ளிரவு வீட்டின் மீது மண்ணெண்ணெய் புட்டி குண்டு வீசிய கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா்.

அரிட்டாபட்டியைச் சோ்ந்த வடிவேலன் என்பவரது வீட்டில் அவரது சகோதரி அழகு (48), தனது மகள், பேரனுடன் வசித்து வருகிறாா். இந்த நிலையில், புதன்கிழமை நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் வந்த 6 போ் கும்பல் இவரது வீட்டில் மண்ணெண்ணெய் புட்டி குண்டுகளை வீசினா். இதில், வீட்டின் முன் இருந்த நைலான் கட்டில் எரிந்து சேதமடைந்தது.

இதுகுறித்து அழகு அளித்த தகவலின் பேரில், மதுரை ஊரக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டாா். மேலூா் போலீஸாா் சிதறிக் கிடந்த பாட்டில்களை பாா்வையிட்டனா்.

மேலும் அழகு அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, குண்டு வீசியவா்கள் யாா் என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.