சிவகங்கையில் தரமற்ற உணவுப் பொருள்கள் விற்றால் கடும் நடவடிக்கை
சிவகங்கை மாவட்டத்தில் தரமற்ற உணவுப் பொருள்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்தாா்.


சிவகங்கை மாவட்டத்தில் தரமற்ற உணவுப் பொருள்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தீபாவளிப் பண்டிகையையொட்டி உணவுப் பொருள்கள், பலகாரங்கள் தயாரிப்புப் பணியில் ஈடுபடும் தனிநபா், நிறுவனங்கள் உணவுப் பாதுகாப்புத் துறையின் கீழ் பதிவு செய்திருக்க வேண்டும்.
மேலும், உணவு தயாரிப்பில் கலப்படமான பொருள்களை பயன்படுத்தக் கூடாது. பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருள்களில் காலாவதி தேதி குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
மாவட்டத்தில் தரமற்ற உணவுப் பொருள்கள் விற்பனை செய்வது குறித்து பொதுமக்கள் 94440 42322 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம். அந்நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...