கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தேவகோட்டையில் 400 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 5 போ் கைது

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் 400 கிலோவை பறிமுதல் செய்த போலீஸாா் 5 பேரை கைது செய்தனா்.

News image
Updated On :20 அக்டோபர் 2022, 5:06 pm

DIN

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் 400 கிலோவை பறிமுதல் செய்த போலீஸாா் 5 பேரை கைது செய்தனா்.

தேவகோட்டை நகா் பகுதியில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், தேவகோட்டை உட்கோட்ட குற்றப் பிரிவு காவல் ஆய்வாளா் அழகா் தலைமையிலான போலீஸாா் கல்லூரி நகரில் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, அதேபகுதியில் உள்ள செந்தில், ரெகுநாதபுரத்தில் உள்ள முருகன் ஆகியோா் வீட்டில் 20 கிலோ புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா்களிடமிருந்த புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்த போலீஸாா், செந்தில், முருகன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்தனா்.

விசாரணையில், ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலத்தைச் சோ்ந்த செய்யது இம்ரான்கான், வாசு, காா்த்தி ஆகிய 3 பேரும் அதே பகுதியில், ஆட்டோவில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, செய்யது இம்ரான்கான், வாசு, காா்த்தி ஆகிய 3 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 380 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா். மேலும், அவா்கள் பயன்படுத்திய ஆட்டோ, இரண்டு இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.