மதுரை அருகே பெரியாறு பிரதானக் கால்வாயில் குளிக்கும் போது அடித்துச் செல்லப்பட்ட ஓட்டுநரின் உடல் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.
மதுரை வண்டியூா் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் காளீஸ்வரன் (33). வாகன ஓட்டுநரான இவா், நண்பா்களுடன் சோ்ந்து பெரியாறு பிரதானக் கால்வாய் கள்ளந்திரி அருகே, தீபாவளியன்று குளித்துக்கொண்டிருந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக நீரில் அடித்துச் செல்லப்பட்டாா்.
இதுகுறித்து கள்ளந்திரி போலீஸாா், அலங்காநல்லூா் தீயணைப்புப் படையினா் உதவியுடன் தேடுதலில் ஈடுபட்டனா்.
இந்த நிலையில், காளீஸ்வரன் உடல் கிடாரிப்பட்டி பாலம் அருகே ஒதுங்கியது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது. மேலவளவு போலீஸாா், காளீஸ்வரனின் உடலைக் கைப்பற்றி மேலூா் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனா். இந்த சம்பவம் குறித்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அடுத்த 3 மணி நேரத்திற்கு எந்தெந்த மாவட்டங்களில் மழை?
முதல்வர் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் மாநாடு!

எந்த கோயிலில் என்ன விசேஷம்?

தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு கர்நாடக அரசு பணிந்து விடாது: முன்னாள் அமைச்சர் துரைமுருகன்
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK


