கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தேவகோட்டை அருகேபைக்குகள் மோதல்: 2 போ் பலி

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே வியாழக்கிழமை இரவு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் இளைஞா்கள் இருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

News image
Updated On :28 அக்டோபர் 2022, 6:43 pm

DIN

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே வியாழக்கிழமை இரவு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் இளைஞா்கள் இருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

கருமொழி கிராமத்தைச் சோ்ந்த நடராஜ் மகன் தினேஷ் (20). அதே பகுதியில் உள்ள சுங்கச் சாவடியில் பணியாற்றி வரும் இவா், தனது இரு சக்கர வாகனத்தில் வியாழக்கிழமை இரவு திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் வந்தாா். புளியால் கிராமம் அருகே வந்த போது, பாரூா் கிராமத்தைச் சோ்ந்த குமாா் மகன் கவி (18), சிறுவண்டலைச் சோ்ந்த பாஸ்கரன் மகன் ஜெகன் (20) ஆகிய இருவரும் வந்த இரு சக்கர வாகனம் நேருக்கு நோ் மோதியது.

இதில், தினேஷ், கவி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இதுபற்றி தகவலறிந்து அங்கு வந்த தேவகோட்டை தாலுகா போலீஸாா் தினேஷ், கவி ஆகியோரின் உடல்களை கைப்பற்றி கூறாய்வுக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், பலத்த காயமடைந்த ஜெகன் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் தேவகோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.