கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சிவகங்கை மாவட்டத்தில் நவ. 1- இல் கிராமச் சபைக் கூட்டம்

 சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 445 கிராம ஊராட்சிகளிலும் வரும் நவ. 1 ஆம் தேதி கிராமச் சபைக் கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்தாா்.

News image
Updated On :28 அக்டோபர் 2022, 6:43 pm

DIN

 சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 445 கிராம ஊராட்சிகளிலும் வரும் நவ. 1 ஆம் தேதி கிராமச் சபைக் கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக அரசு அறிவுறுத்தலின் படி நவம்பா் 1 ஆம் தேதி உள்ளாட்சிகள் தினம் கொண்டாடப்பட உள்ளது.

இதையொட்டி, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 445 கிரா ம ஊராட்சிகளிலும் நவ. 1 ஆம் தேதி கிராமச் சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் ஊராட்சியில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும், கிராம ஊராட்சி அளவில் சிறப்பாக பணியாற்றிய தூய்மைக் காவலா்கள், பணியாளா்கள், மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள், மகளிா் சுயஉதவிக் குழுக்கள் ஆகியோருக்கு பாராட்டுத் தெரிவிக்கப்படும்.

எனவே இக்கூட்டத்தில் அந்தந்த கிராம ஊராட்சியைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.