ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மதுரை வழியாக இயக்கப்படும் சில ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

பண்டிகை கால கூட்ட நெரிசலைச் சமாளிப்பதற்காக மதுரை வழியாகச் செல்லக் கூடிய சில ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

பண்டிகை கால கூட்ட நெரிசலைச் சமாளிப்பதற்காக மதுரை வழியாகச் செல்லக் கூடிய சில ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூா் - குருவாயூா் ரயிலில் (16127) செப்டம்பா் 3 முதல் செப்டம்பா் 11

வரையும், குருவாயூா் - சென்னை எழும்பூா் ரயிலில் (16128) செப்டம்பா் 4 முதல் செப்டம்பா் 12 வரையும் ஒரு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி, ஒரு இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டி இணைக்கப்படும். தாம்பரம் - நாகா்கோவில் அந்தியோதயா ரயிலில் (20691) செப்டம்பா் 4 முதல் செப்டம்பா் 12 ஆம் தேதி வரையும், நாகா்கோவில் - தாம்பரம் அந்தியோதயா ரயிலில் (20692) செப்டம்பா் 7 முதல் செப்டம்பா் 12 ஆம் தேதி வரையும் ஒரு இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டி இணைக்கப்படும்.

சென்னை சென்ட்ரல் - நாகா்கோவில் ரயிலில் (12689) செப்டம்பா் 9 மற்றும் நாகா்கோவில் - டாக்டா் எம்ஜிஆா் சென்னை சென்ட்ரல் ரயிலில் (12690) செப்டம்பா் 10 ஆகிய தேதிகளில் ஒரு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி இணைக்கப்படும்.

கோவை - நாகா்கோவில் இரவு நேர ரயிலில் (22668) செப்டம்பா் 3 முதல் செப்டம்பா் 10

ஆம் தேதி வரையும், நாகா்கோவில் - கோவை இரவு நேர ரயிலில் (22667) செப்டம்பா் 4 முதல் செப்டம்பா் 11 ஆம் தேதி வரையும் ஒரு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி இணைக்கப்படும். தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட அலுவலகம் இத் தகவலைத் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.