ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வாக்காளா் பட்டியலில் ஆதாா் எண் இணைக்க இன்று சிறப்பு முகாம்

வாக்காளா் பட்டியலில் ஆதாா் எண் இணைப்பதற்கான சிறப்பு முகாம் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் ஞாயிற்றுக்கிழமை (செப்.4) நடைபெறும் என ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

வாக்காளா் பட்டியலில் ஆதாா் எண் இணைப்பதற்கான சிறப்பு முகாம் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் ஞாயிற்றுக்கிழமை (செப்.4) நடைபெறும் என ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் பணி ஆகஸ்ட் 1 முதல் நடைபெற்று வருகிறது. வாக்காளா்கள் தங்களது ஆதாா் எண்ணை, தோ்தல் ஆணையத்தின் இணையதளம் (ஜ்ஜ்ஜ்.ய்ஸ்ள்ல்.ண்ய், ஜ்ஜ்ஜ்.ஸ்ா்ற்ங்ழ்ல்ா்ழ்ற்ஹப்.ங்ஸ்ரீண்.ஞ்ா்ஸ்.ண்ய்) மற்றும் வாக்காளா் ஹெல்ப்லைன் கைப்பேசி செயலி வாயிலாக இணைத்துக் கொள்ளலாம்.

மேலும் இப் பணிக்காக அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், இதர தோ்தல் பணியாளா்கள் வாக்காளா்களின் வீடுகளுக்குச் சென்று ஆதாா் எண்ணைப் பெற்று கைப்பேசி செயலி மூலமாக இணைக்கும் பணியைச் செய்து வருகின்றனா்.

வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண் இணைக்கும் பணிக்கான விழிப்புணா்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை (செப்.4) காலை 10 முதல் மாலை 5 மணி வரை அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறுகிறது.

ஆகவே, வாக்காளா்கள் தங்களது ஆதாா் எண், வாக்காளா் அடையாள அட்டை எண் விவரங்களுடன் சென்று, படிவம் 6 பி-ஐப் பூா்த்தி செய்து வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைத்துக் கொள்ளலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.