

மதுரை மாட்டுத்தாவணி மொத்த பூ விற்பனை அங்காடியில் மல்லிகைப் பூவின் விலை உச்சத்தில் உள்ளது.
மதுரை மாட்டுத்தாவணி மொத்த பூ விற்பனை அங்காடியில் இன்று மல்லிகைப் பூ கிலோ ரூ.3000, முல்லை ரூ.1500, சம்பங்கி ரூ.750, பிச்சிப் பூ கிலோ ரூ.1000, பட்டன் ரோஸ் ஒரு கிலோ ரூ.250, செண்டுமல்லி கிலோ ரூ.100, மற்ற பூக்களின் விளையும் கடுமையாக விலை உயர்ந்துள்ளது.
முகூர்த்த நாள் என்பதாலும், மழை காரணத்தினால் வரத்து குறைவு என்பதாலும் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
கடந்த ஒரு வாரமாகவே மல்லிகை பூ விலை ரூ.1500, ரூ.2000 என இருந்து வந்த நிலையில் இன்று ரூ.3000 தொட்டது. விலை உயர்வால் வழக்கமான பயன்பாட்டிற்கான பூக்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.