ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தாமிரவருணியை பொருநை நதி எனப் பெயா் மாற்றக் கோரி வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

மொழியியல் அறிஞா்களின் கருத்துக்களைக் கேட்டு உரிய ஆவணங்களுடன் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :9 செப்டம்பர் 2022, 5:25 pm

DIN

தாமிரவருணியை பொருநை நதி எனப் பெயா் மாற்றம் செய்யக் கோரியது தொடா்பாக, மொழியியல் அறிஞா்களின் கருத்துக்களைக் கேட்டு உரிய ஆவணங்களுடன் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையைச் சோ்ந்த எஸ்.எம்.ஏ.

பொன்காந்திமதிநாதன் தாக்கல் செய்த மனு:

மேற்குத் தொடா்ச்சி மலையில், பாபநாசம் பொதிகை மலையில் உற்பத்தியாகும் பொருநை நதியானது, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்கள் வழியாக மன்னாா் வளைகுடாவில் கலக்கிறது. பிறப்பிடத்தில் தொடங்கி கடலில் கலப்பது வரை 128 கிமீ பயணிக்கும் தமிழகத்தின் ஒரே வற்றாத நதியாக உள்ளது. தமிழ் கலாசாரம் மற்றும் நாகரிகத்தின் அடையாளமாகவும், பல்வேறு தமிழ் இலக்கியங்களின் பிறப்பிடமாகவும் பொருநை நதி உள்ளது.

தாமிரவருணி என்பது வடமொழிச் சொல். தாமிரவருணி ஆறு முன்னதாக பொருநை நதி எனும் தமிழ்ப் பெயரால் வழங்கப்பட்டுள்ளது. தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் பொருநை நதி என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பல்வேறு அகழாய்வாளா்கள், தமிழறிஞா்கள் இதை உறுதி செய்துள்ளனா்.

தாமிரவருணி என்ற வடமொழிச் சொல்லுக்கு மாற்றாக, தூய தமிழ் பெயரான பொருநை நதி என மாற்றம் செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் ஆா்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோா் கொண்ட அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கு முக்கியத்துவம் மிக்கது என்று குறிப்பிட்டு, இதுதொடா்பாக மொழியியல் அறிஞா்களின் கருத்துக்களைக் கேட்டு, உரிய ஆவணங்களுடன் பதிலளிக்குமாறு உத்தரவிட்டனா். விசாரணையை இரு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.