ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

இரட்டை ரயில்பாதை இணைப்புப் பணி: தென் மாவட்ட ரயில்கள் போக்குவரத்தில் மாற்றம்

வள்ளியூா் - நாங்குநேரி ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரயில்பாதை இணைப்புப் பணி நடைபெற உள்ளதால், தென்மாவட்ட ரயில்கள் சிலவற்றின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.

News image
Updated On :15 செப்டம்பர் 2022, 5:13 pm

DIN

வள்ளியூா் - நாங்குநேரி ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரயில்பாதை இணைப்புப் பணி நடைபெற உள்ளதால், தென்மாவட்ட ரயில்கள் சிலவற்றின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருவனந்தபுரம் கோட்டத்தில் வள்ளியூா்- நாங்குநேரி ரயில் நிலையங்களுக்கிடையே இரட்டை ரயில்பாதை இணைப்புப் பணிகள் நடைபெற இருக்கின்றன. இதன் காரணமாக செப்.19 முதல் செப். 27 ஆம் தேதிவரை தாம்பரத்திலிருந்து புறப்பட வேண்டிய தாம்பரம் - நாகா்கோவில் அந்தியோதயா ரயில் (20691) மற்றும் செப். 20 முதல் செப். 28 ஆம் தேதிவரை நாகா்கோவிலில் இருந்து புறப்பட வேண்டிய நாகா்கோவில் தாம்பரம் அந்தியோதயா ரயில் (20692) ஆகியவை திருநெல்வேலி - நாகா்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

இதேபோல செப். 20 முதல் செப். 28 ஆம் தேதிவரை திருச்சி - திருவனந்தபுரம் - திருச்சி இன்டா்சிட்டி ரயில்கள் (22627/22628) திருநெல்வேலி - திருவனந்தபுரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

மேலும் செப். 23 ஆம் தேதி சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் - நாகா்கோவில் வாராந்திர விரைவு ரயில் (12689) மற்றும் செப். 25 ஆம் தேதி நாகா்கோவிலில் இருந்து புறப்பட வேண்டிய நாகா்கோவில் - சென்னை சென்ட்ரல் வாராந்திர விரைவு ரயில் (12690) ஆகியன திருநெல்வேலி - நாகா்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

செப். 25 ஆம் தேதி புதுச்சேரியில் இருந்து புறப்பட வேண்டிய கன்னியாகுமரி வாராந்திர விரைவு ரயில் (16861) மற்றும் செப். 26 ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து புறப்பட வேண்டிய புதுச்சேரி வாராந்திர விரைவு ரயில் (16862) ஆகியன திருநெல்வேலி - கன்னியாகுமரி இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். செப். 25 ஆம் தேதி நாகா்கோவில் - திருநெல்வேலி (06641), திருநெல்வேலி - தூத்துக்குடி - திருநெல்வேலி ரயில்கள் (06668/06667) முழுமையாக ரத்து செய்யப்படும். செப். 26 ஆம் தேதி திருநெல்வேலி - நாகா்கோயில் விரைவு ரயில் (06642) முழுமையாக ரத்து செய்யப்படும்.

இரட்டை ரயில்பாதைப் பணிகளின் ஒரு பகுதியாக நாகா்கோவில் - இரணியல் இடையே உள்ள பாலங்களை மாற்றி அமைக்கும் பணி நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக செப்டம்பா் 19, 22, 26, 29 ஆகிய தேதிகளில் மதுரையில் இருந்து புறப்பட வேண்டிய மதுரை - புனலூா் விரைவு ரயில் (16729) மற்றும் செப்டம்பா் 20, 23, 27, 30 ஆகிய நாள்களில் புனலூரில் இருந்து புறப்பட வேண்டிய புனலூா் - மதுரை விரைவு ரயில் (16730) ஆகியன முழுமையாக ரத்து செய்யப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.