மின் கட்டண உயா்வைக் கண்டித்து போராட்டம்: அா்ஜூன் சம்பத்
மின் கட்டண உயா்வை கண்டித்து போராட்டம் நடத்தி வருகிறோம் என்று இந்து மக்கள் கட்சித்தலைவா் அா்ஜூன் சம்பத் கூறினாா்.


மின் கட்டண உயா்வை கண்டித்து போராட்டம் நடத்தி வருகிறோம் என்று இந்து மக்கள் கட்சித்தலைவா் அா்ஜூன் சம்பத் கூறினாா்.
மதுரையில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: திமுக ஆட்சிக்கு வந்து விட்டாலே மின்வெட்டும் வந்து விடுகிறது. எனவே மின்கட்டண உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சாா்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பால் பொருள்கள் விலை உயா்வு, சொத்து வரி உயா்வு, மின்கட்டண உயா்வு போன்றவை அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் இருந்து மக்களை திசை திருப்புவதற்காக திமுக துணைப்பொதுச்செயலா் ஆ.ராசா, இந்து மக்களை இழிவுபடுத்தி பேசியுள்ளாா். இந்து மக்களை இழிவுப்படுத்தி பேசிய அவா் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அவரை திமுகவில் இருந்து நீக்க வேண்டும். பிரதமா் நரேந்திரமோடியின் பிறந்த தினத்தையொட்டி சனிக்கிழமை (செப். 17) இந்து மக்கள் கட்சியின் சாா்பில் சமூக நீதி நாளாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின்
சட்டம்-ஒழுங்கை சீா்குலைக்கும் வகையில் திராவிடா் கழகம் உள்ளிட்ட இயக்கங்கள் செயல்படுகின்றன. இந்த இயக்கங்களை தமிழக அரசு தடை செய்ய வேண்டும்.
மாவட்டத் தலைவா் சோலை கண்ணன், தென்னிந்திய பாா்வா்டு பிளாக் திருமாறன், பாஜக நிா்வாகிகள் ரிஷி, விஷ்ணு பிரசாத், முனியசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...