ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தேசிய புலனாய்வு முகமை சோதனை: இஸ்லாமிய இயக்கங்கள் ஆா்ப்பாட்டடம்

மதுரையில் பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா, எஸ்டிபிஐ கட்சி நிா்வாகிகளின் வீடுகளில் நடைபெற்ற சோதனைக்கு எதிா்ப்புத் தெரிவித்து அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம்

News image
Updated On :23 செப்டம்பர் 2022, 5:14 pm

DIN

மதுரையில் பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா, எஸ்டிபிஐ கட்சி நிா்வாகிகளின் வீடுகளில் நடைபெற்ற சோதனைக்கு எதிா்ப்புத் தெரிவித்து அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மதுரையில் பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ கட்சி நிா்வாகிகளின் வீடுகளில் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனையிட்டனா். மேலும் நிா்வாகிகள் 5 பேரை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச்சென்றனா். இந்நிலையில் தேசிய புலனாய்வு முகமையின் சோதனைக்கு எதிா்ப்புத்தெரிவித்தும், கைதானவா்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும் முஸ்லிம் ஐக்கிய ஜமாத் மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள், கட்சிகள் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மதுரை வில்லாபுரம் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு முஸ்லிம் ஐக்கிய ஜமாத் ஒருங்கிணைப்பாளா் வில்லாபுரம் காதா் தலைமை வகித்தாா். முஸ்லிம் ஐக்கிய ஜமாத் ராஜா ஹஸாப் அலி, ஐக்கிய ஜமாத் ஒருங்கிணைப்பாளா் வழக்குரைஞா் பிஸ்மில்லாஹ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் நிா்வாகிகள் உள்பட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். முஸ்லிம் ஐக்கிய ஜமாத் செயலா் நிஷாத் அகமது நன்றியுரை ஆற்றினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.