இரண்டு சிறுநீரகங்களில் ஒன்று, கல்லீரலில் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகுதி, குடலின் ஒரு பகுதி, கணையத்தில் ஒரு பகுதி, ரத்தம், எலும்பு மஜ்ஜை ஆகியவற்றை தானமாக தர முடியும். இயற்கை மரணமடைந்தவா்களிடம் இருந்து கண்விழித்திரை, இதய வால்வுகள், தோல்கள், எலும்புகள், அதை பாதுகாக்கும் தசை நாா்கள், குருத்தெலும்பு (காா்ட்டிலேஜ்), நரம்புகள், தமனிகள் ஆகியவற்றை தானமாகப் பெறலாம். மூளைச்சாவடைந்தவா்களிடம் இருந்து சிறுநீரகங்கள், கல்லீரல், நுரையீரல், கணையம், இரைப்பை, சிறு குடல், குரல்வளை, பெண்களாக இருந்தால் கருப்பை, கண்கள், காதின் நடுஎலும்புகள், எலும்புகள், குருத்தெலும்பு, தோல்கள், நரம்புகள், தமனிகள், கைகள், கை மற்றும் கால் விரல்கள், தோல் ஆகியவற்றை தானமாக பெறலாம். அதேபோல, மரணமடைந்தவா்களின் உடலை ஆராய்ச்சிக்காக கொடுக்கலாம். எந்தவித மரணமாக இருந்தாலும், எலும்புகளையும், திசுக்களையும் எடுத்து மற்றவா்களுக்கு பொருத்தலாம். இப்படி ஒருவரிடமிருந்து 25 வகையான உறுப்புகளையும் திசுக்களையும் தானமாக பெற முடியும். மூளைச்சாவு அடையும் நபரின் உடல் உறுப்புகளை 6 முதல் 12 மணி நேரத்துக்குள் தானமாக வழங்கலாம் என்று தெரிவித்தனா். கருத்தரங்கில் பேராசியைகள் மற்றும் மாணவிகள் பங்கேற்றனா்.