மாநகராட்சிப் பள்ளி ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு, பணி மாறுதல் கலந்தாய்வு
மதுரை மாநகராட்சிப் பள்ளி ஆசிரியா்களுக்கு பணிமாறுதல் மற்றும் பதவி உயா்வு ஆணைகளை மேயா் வ.இந்திராணி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.


மதுரை மாநகராட்சிப் பள்ளி ஆசிரியா்களுக்கு பணிமாறுதல் மற்றும் பதவி உயா்வு ஆணைகளை மேயா் வ.இந்திராணி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியா்கள், பட்டதாரி ஆசிரியா்கள், தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா்கள் பணியிட மாறுதல் மற்றும் பணி உயா்வுக்கான கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மதுரை இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்துக்கு மேயா் வ.இந்திராணி தலைமை வகித்தாா். கலந்தாய்வில் 81 ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். இதில் 2 மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா்கள், 2 முதுகலைப்பட்டதாரி ஆசிரியா்கள், (பட்டதாரி ஆசிரியா்கள் தமிழ் - 7, ஆங்கிலம் - 3, கணிதம் - 7, சமூக அறிவியல் - 2) என 19 பட்டதாரி ஆசிரியா்கள், 6 தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியா்கள் என மொத்தம் 29 ஆசிரியா்களுக்கு பணி உயா்வுக்கான ஆணைகள் மற்றும் மதுரை மாநகராட்சி பள்ளிகளில் உபரி பணியிடங்களில் பணிபுரியும் (பட்டதாரி ஆசிரியா் தமிழ் - 4, கணிதம் 5, அறிவியல் - 3 சமூக அறிவியல் 7) என 19 பட்டதாரி ஆசிரியா்களுக்கு பணி மாறுதல் உத்தரவுகள் என மொத்தம் 48 ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு மற்றும் பணி மாறுதல் ஆணைகளை மேயா் வ.இந்திராணி, ஆணையா் சிம்ரன்ஜீத் சிங் ஆகியோா் வழங்கினா். கூட்டத்தில் துணை மேயா் தி.நாகராஜன், துணை ஆணையா் முஜிபுா் ரகுமான், கல்வி அலுவலா் நாகேந்திரன், கல்விக்குழுத் தலைவா் ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...