உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முகக்கவசம் கட்டாயம்
By DIN | Published On : 17th June 2022 03:42 PM | Last Updated : 17th June 2022 03:42 PM | அ+அ அ- |

கோப்புப்படம்
மதுரை: உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜூன் 20-ம் தேதி முதல் முகக்கவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நிர்வாக நீதிபதி பிரகாஷ் உத்திரவிட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் வழக்குகளுக்கு தொடர்பு இல்லாதவர்கள் நீதிமன்றத்திற்கு வரவேண்டாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நிர்வாக நீதிபதி உத்திரவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: கூத்தாநல்லூரில் சரிந்து விழும் நிலையில் விநாயகர் கோயில்
வழக்குறைஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும். வழக்கிற்கு சம்பந்தம் இல்லாதவர்கள் உயர்நீதிமன்ற கிளைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று நீதிபதி அறிவுறுத்தி உள்ளார்.
நீதிமன்ற வளாகத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் முகக்கவசம் அணிந்து வருவதை உயர்நீதிமன்ற மதுரை கிளை கட்டாயமாக்கியுள்ளது.