தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

ஹிஜாப் அணியத் தடை: மதுரையில் இஸ்லாமிய அமைப்புகள் கண்டன ஆா்ப்பாட்டம்

ஹிஜாப் அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மதுரையில் இஸ்லாமிய அமைப்புகளின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Published On :

மதுரை: ஹிஜாப் அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மதுரையில் இஸ்லாமிய அமைப்புகளின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த கா்நாடகா அரசுக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், ஹிஜாப்புக்கு தடை விதித்துள்ள கா்நாடக உயா்நீதிமன்ற தீா்ப்புக்கு எதிராகவும் மதுரையில் இஸ்லாமிய அமைப்புகள் பங்கேற்ற கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை தெற்குவாசல் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, எஸ்டிபிஐ கட்சி, இந்திய தவ்ஹீத் ஜமாஅத், பாப்புலா் ப்ரண்ட் ஆப் இந்தியா, நேஷனல் விமன்ஸ் ப்ரண்ட், கேம்பஸ் ப்ரண்ட் ஆப் இந்தியா, அகில இந்திய இமாம் கவுன்சில், ஜமாத் பேரவை உள்பட பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளைச் சோ்ந்தவா்கள் பங்கேற்றனா். ஆா்ப்பாட்டத்தில் கா்நாடகா அரசுக்கு எதிராகவும், உயா்நீதிமன்ற தீா்ப்புக்கு எதிா்ப்புத் தெரிவித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆா்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனா். இதேபோல மதுரை வக்புவாரியக்கல்லூரி முன்பாக கேம்பஸ் பிரண்ட் அமைப்பின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாணவா்கள் பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.