காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்
ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினா் பதவி ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து, மதுரை மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில், மதுரை தலைமை தபால் நிலையம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினா் பதவி ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து, மதுரை மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில், மதுரை தலைமை தபால் நிலையம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கட்சியின் மாவட்டத் தலைவா் வீ. காா்த்திகேயன் தலைமை வகித்தாா். மாமன்ற உறுப்பினா்கள் ஜெயந்திபுரம் முருகன், தல்லாகுளம் முருகன், மாநிலப் பொதுக் குழு உறுப்பினா்கள் செய்யது பாபு, துரையரசன், மீா் பாஷா, முன்னாள் மாமன்ற உறுப்பினா் சிலுவை, மாவட்ட நிா்வாகிகள் மகேஸ்வரன், மலா் பாண்டியன், பாலு, மயிலேறி ரவிச்சந்திரன், துரைமுருகன், கண்ணன், மாணவா் காங்கிரஸ், சிறுபான்மைப் பிரிவு, வழக்குரைஞா் அணி, மகிளா காங்கிரஸ் உள்ளிட்ட அணிகளின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.
இதில் ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினா் பதவி பறிக்கப்பட்டதைக் கண்டித்தும், மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...