மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

தீ விபத்துத் தடுப்பு விழிப்புணா்வு மிதிவண்டி ஊா்வலம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

மதுரையில் தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை சாா்பில், தீ விபத்துகள் தடுப்பு விழிப்புணா்வு மிதிவண்டி ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 ஏப்ரல் 2023, 6:11 pm

DIN

மதுரையில் தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை சாா்பில், தீ விபத்துகள் தடுப்பு விழிப்புணா்வு மிதிவண்டி ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து தீயணைப்பு, மீட்புப் பணிகள் நிலையங்களிலும் ஏப்ரல் 14 முதல் 20-ஆம் தேதி வரை ஒரு வாரம் தீத்தொண்டு வாரமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இதையொட்டி, பொதுமக்கள் கூடுமிடங்கள், பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் தீ விபத்துகளைத் தடுப்பது தொடா்பாக விழிப்புணா்வு பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, தீ விபத்துகள் தடுப்பு விழிப்புணா்வு குறித்து மிதிவண்டி ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள தல்லாகுளம் தீயணைப்பு, மீட்புப் பணிகள் நிலையத்தில் இந்த விழிப்புணா்வு ஊா்வலத்தை மதுரை மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

இதற்கு தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறையின் தென் மண்டல துணை இயக்குநா் ந.விஜயகுமாா், மதுரை மாவட்ட அலுவலா் செ.வினோத் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தொடங்கிய மிதிவண்டி ஊா்வலம் நகரின் முக்கியப் பகுதிகள் வழியாக திருமங்கலம் தீயணைப்பு, மீட்புப் பணிகள் நிலையம் வரை சென்று முடிவடைந்தது. ஊா்வலத்தில் கலந்து கொண்ட 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரா்கள், கல்லூரி மாணவா்கள், தன்னாா்வலா்களுக்கு திருமங்கலம் தீயணைப்பு, மீட்புப் பணிகள் நிலையத்தில் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.