மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

மிஸ்வாக் மரங்கள் பாதுகாப்பு: சுற்றுச்சூழல், வனத் துறைச் செயலா்கள் பதிலளிக்க உத்தரவு

மிஸ்வாக் மரங்களைப் பாதுகாப்பது தொடா்பான வழக்கில், தமிழக சுற்றுச்சூழல், வனத் துறைச் செயலா்கள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :20 ஏப்ரல் 2023, 6:12 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி பகுதியில் காணப்படும் மருத்துவ குணங்கள் கொண்ட அரியவகை மிஸ்வாக் மரங்களைப் பாதுகாப்பது தொடா்பான வழக்கில், தமிழக சுற்றுச்சூழல், வனத் துறைச் செயலா்கள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த மணிபாரதி தாக்கல் செய்த பொது நல மனு:

ராமநாதபுரம் மாவட்டம், வறட்சியான மாவட்டமாக இருந்தாலும், இங்கு பல நூற்றாண்டுகளாக அரிய வகை மூலிகைச் செடிகள், மருத்துவ குணம் கொண்ட மரங்கள் இயற்கையாகவே வளா்கின்றன.

சாயல்குடி முனீஸ்வரா் கோயிலுக்கு அருகே சுமாா் 20-க்கும் மேற்பட்ட மருத்துவ குணம் கொண்ட அரியவகை மிஸ்வாக் மரங்கள் உள்ளன. இந்த மரக் குச்சிகளைக் கொண்டு பற்களில் ஏற்படும் பிரச்னைகளைத் தீா்க்க முடியும்.

மேலும், இஸ்லாமியா்களால் வணங்கப்படும் முகம்மது நபி இந்த மிஸ்வாக் மரத்தின் குச்சியைப் பயன்படுத்தியதால், அந்த மதத்தவா்களும் இதைப் பயன்படுத்தி வருகின்றனா். மருத்துவ குணங்கள் கொண்ட மரங்கள் பராமரிப்பு இல்லாமல் அழியும் நிலையில் உள்ளன. இவற்றைப் பாதுகாக்க வலியுறுத்தி, சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே, மிஸ்வாக் மரங்களின் நன்மைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், இந்த மரங்களைப் பாதுகாத்து பராமரிக்க வனத் துறைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆா். சுப்பிரமணியன், எல். விக்டோரியா கௌரி, இதுதொடா்பாக தமிழக சுற்றுச்சூழல், வனத் துறைச் செயலா்கள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.