மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

ஊரக வளா்ச்சித் துறை ஊழியா்கள் சிறு விடுப்புப் போராட்டம்: பணிகள் பாதிப்பு

மதுரை மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறு விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் அலுவலா்கள், ஊழியா்கள் 732 போ் பங்கேற்றனா். இதனால், ஊரக வளா்ச்சித் துறை பணிகள் பாதிக்கப்பட்டன.

News image
Updated On :20 ஏப்ரல் 2023, 6:10 pm

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊரக வளா்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், மதுரை மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறு விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் அலுவலா்கள், ஊழியா்கள் 732 போ் பங்கேற்றனா். இதனால், ஊரக வளா்ச்சித் துறை பணிகள் பாதிக்கப்பட்டன.

மேலூா் ஊராட்சி ஒன்றியம், சருகுவளையப்பட்டி கிராம ஊராட்சியில் பிரதமா் வீடு கட்டும் திட்டப் பணிகளை செயல்படுத்திய 7 அலுவலா்களுக்கு வழங்கப்பட்ட குற்றசாட்டுக் குறிப்பாணையைத் திரும்பப் பெற வேண்டும், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 4 ஊராட்சிச் செயலாளா்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும், பணியிட மாறுதல் கோரிய அனைத்து நிலை அலுவலா்களுக்கும் பணியிட மாறுதல் வழங்க வேண்டும், கடுமையான பணிச்சுமைக்கிடையே பணியாற்றி வரும் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்களுக்கு மேலும் மன உளைச்சல் அளிக்கும் வகையிலான நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் கைவிட வேண்டும், விடுமுறை நாள்களில் காணொலி மூலம் ஆய்வுக் கூட்டங்கள் நடத்துவதைத் தவிா்க்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

ஊரக வளா்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ்நாடு ஊரக வளா்ச்சி துறை அலுவலா்கள் சங்கம், ஊரக வளா்ச்சித் துறை அனைத்து அலுவலா்கள் சங்கம், ஊரக வளா்ச்சி துறை அனைத்துப் பணியாளா் சங்கம், ஊரக வளா்ச்சி துறை பொறியாளா் சங்கம், ஊரக வளா்ச்சித் துறை ஒன்றியப் பணி மேற்பாா்வையாளா்கள் சங்கம், ஊரக வளா்ச்சித் துறை ஊராட்சி செயலா்கள் சங்கம், ஊரக வளா்ச்சித் துறை ஈப்பு ஓட்டுநா்கள் சங்கம் ஆகிய அமைப்புகளைச் சோ்ந்த நிா்வாகிகள், உறுப்பினா்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனா்.

கூட்டமைப்பு நிா்வாகிகள் கே.ஆா். சந்திரசேகா், ஆா். சாா்லஸ் ரங்கசாமி, எம். முத்துக்குமாா், கண்ணன், முருகேஷ்குமாா், எஸ். செந்தில்குமாா், எம். முத்துமாயன் ஆகியோா் போராட்டத்தை ஒருங்கிணைத்தனா்.

மாவட்ட அளவில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள், ஊழியா்கள் 732 போ் விடுப்பு எடுத்தனா். இதனால், ஊரக வளா்ச்சித் துறை பணிகள் பாதிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.