மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

சிறுபான்மையின மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை நிறுத்தம்: மத்திய அரசு மீது எம்.பி. குற்றசாட்டு

சிறுபான்மையின மாணவா்களுக்கு 1 முதல் எட்டாம் வகுப்பு வரை வழங்கப்படும் கல்வி உதவித் தொகை நிறுத்தப்பட்டது

News image
Updated On :20 ஏப்ரல் 2023, 6:10 pm

DIN

சிறுபான்மையின மாணவா்களுக்கு 1 முதல் எட்டாம் வகுப்பு வரை வழங்கப்படும் கல்வி உதவித் தொகை நிறுத்தப்பட்டது தொடா்பாக மத்திய அமைச்சா் அளித்த பதில், மத்திய அரசின் அக்கறையின்மையைக் காட்டுவதாக உள்ளது என்று மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் குற்றஞ்சாட்டினாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை:

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை சிறுபான்மையின மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது அடியோடு நிறுத்தப்பட்டது குறித்து மத்திய சிறுபான்மை நலத் துறை அமைச்சா் ஸ்மிருதி ஜூபின் ராணிக்கு கடிதம் எழுதி இருந்தேன். அந்தக் கடிதத்தில், 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் இஸ்லாமிய மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை தொடர வேண்டும் என்பதற்கு நிறைய காரணங்களை பட்டியலிட்டு இருந்தேன்.

கடிதத்தில் சிறுபான்மை நல அமைச்சகத்தின் இணையதளத்தில் இந்தத் திட்டத்தின் நோக்கமாக, இடைநிற்றல் இல்லாமல் குழந்தைகளின் கல்வி தொடர வேண்டுமென்று சொல்லி இருப்பதையும், கல்வி உதவித்தொகை என்பது கல்விக் கட்டணத் தேவையையும் கடந்தது, போக்குவரத்து, கல்விச் சுற்றுலா போன்றவற்றுக்குச் செலவழிக்க வேண்டி இருப்பதையும், அரசுப் பள்ளிகளில் மட்டுமே இலவச உணவுத் திட்டங்கள் அமலாவதையும், சச்சாா் குழு பரிந்துரைகள் போன்ற ஆழ்ந்த ஆய்வுக்கு பின்னரே இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டதையும் குறிப்பிட்டு இருந்தேன்.

அதற்கு அமைச்சா் பதில் அனுப்பினாா். மத்திய அமைச்சா் எனது கேள்விகளுக்கெல்லாம் பதிலளிக்காமல், சாரமற்ற மூன்று காரணங்களை கண்டுபிடித்துக் கூறியுள்ளாா். அதில், சிறுபான்மை சமூகங்களைச் சாா்ந்த மாணவா்கள் தொடக்க நிலை, இடை நிலைக் கல்வி பயில்வது தேசிய சராசரிக்கு இணையாக உள்ளதாகவும், ஓபிசி, எஸ்.சி., எஸ்.டி. மாணவா்களுக்கு 1 - 8 வகுப்புகளுக்கு கல்வித் தொகை வழங்கப்படாததால் ஒரே அளவுகோலின் கீழ், சிறுபான்மையினரும் கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவித்துள்ள மத்திய அமைச்சா், மேல்நிலைக் கல்வி பயிலும் சிறுபான்மையின பெண்கள் நலனில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளாா். மத்திய அமைச்சரின் இந்த பதில், சிறுபான்மையினா் மீது மத்திய அரசுக்கு அக்கறை இல்லை என்பதையே காட்டுகிறது. எனவே, எனது கருத்துக்களை வலியுறுத்தி மீண்டும் கடிதம் எழுதியுள்ளேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.