மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

பல் பிடுங்கப்பட்ட விவகாரம்: அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதிபதி இன்று அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

ஆவணங்களை குற்றவியல் நீதிபதி அறிக்கையாக வெள்ளிக்கிழமை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :20 ஏப்ரல் 2023, 6:14 pm

DIN

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல் உள்கோட்டத்தில் விசாரணைக் கைதிகளின் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில், பாதிக்கப்பட்டவா் மீதான குற்ற நடவடிக்கைகள், அதுகுறித்த ஆவணங்களை குற்றவியல் நீதிபதி அறிக்கையாக வெள்ளிக்கிழமை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

இதுகுறித்து அம்பாசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த அருண்குமாா் தாக்கல் செய்த மனு:

அம்பாசமுத்திரம் காவல் உள்கோட்டத்தில் விசாரணைக் கைதிகளின் பற்களை ஏஎஸ்பி பல்வீா் சிங் பிடுங்கி சித்திரவதை செய்தாா். இந்த சித்திரவதைக்கு நானும் இலக்கானேன். அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் என் மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை, கைது செய்யப்பட்டதற்கான காரணம், மருத்துவப் பரிசோதனை, சிறையில் அடைத்ததற்கான சான்று, நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் விவரங்களைத் தரக் கோரி அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன்.

அப்போது, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை எனக் கூறி, எனது மனு நிராகரிக்கப்பட்டது. எனவே, என் மீது பதியப்பட்ட குற்ற வழக்கின் அனைத்து விவரங்களையும் அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதிமன்றம் வழங்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி ஜி. இளங்கோவன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதம்:

இந்த வழக்கில் மனுதாரரின் பற்களைப் பிடுங்கி காவல் துறையினா் கடும் குற்றச்செயலில் ஈடுபட்டனா். தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரணை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மனுதாரரான அருண்குமாா் சாா்பில், வழக்கு ஆவணங்களைத் தரக் கோரி அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டது. இது சட்டவிரோதம், ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி உரிய ஆவணங்களை மனுதாரருக்கு வழங்க உத்தரவிட வேண்டும்.

இதைப் பதிவு செய்த நீதிபதி, பாதிக்கப்பட்ட அருண்குமாா் தாக்கல் செய்த மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?. அவரது மனு நிராகரிக்கப்பட்டதா அல்லது திருப்பி அனுப்பப்பட்டதா?. இதுகுறித்து அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதிபதி வெள்ளிக்கிழமை (ஏப். 21) அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.