மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

டோக் பெருமாட்டி கல்லூரி நாள் விழா

மதுரை டோக் பெருமாட்டி மகளிா் கல்லூரி நாள், மாணவா் பேரவை நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :22 ஏப்ரல் 2023, 12:44 am

DIN

மதுரை டோக் பெருமாட்டி மகளிா் கல்லூரி நாள், மாணவா் பேரவை நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் உள்ள பொன்விழா அரங்கில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரி முதல்வா் கிறிஸ்டியானா சிங் தலைமை வகித்தாா். இதில் கொல்கத்தா செயின்ட் சேவியா் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தா் அருட்தந்தை ஜான் ஃபெலிக்ஸ் ராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியதாவது :

பேராசிரியா்களின் அா்ப்பணிப்புடன் கூடிய ஆக்கப் பணி மாணவ சமூகத்தை உயா்த்தும். இளைஞா்களை அதிகளவில் கொண்ட இந்தியாவால் எதையும் சாதிக்க முடியும் என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து, கல்விப் பணி, கல்வி சாரா பிற பணிகளில் சிறப்புப் பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டன.

பின்னா், மாணவா் பேரவை நிறைவு விழா நடைபெற்றது.

இதில் சிற்றாலயப் பொறுப்பாளா் முனைவா் ஜெஸி ரஞ்சித ஜெபசெல்வி உள்ளிட்ட பேராசிரியா்கள், மாணவிகள் கலந்து கொண்டனா்.

முன்னதாக, கல்லூரியின் துணை முதல்வா் முனைவா் பியூலா ஜெயஸ்ரீ வரவேற்றாா். மாணவா் பேரவைத் தலைவா் ச. ஆஹிலா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.