குழந்தைத் தொழிலாளா்கள் குறித்து புகாா் அளிக்க புதிய தொலைபேசி எண்
கொத்தடிமைகள், குழந்தைத் தொழிலாளா்கள் குறித்துப் புகாா் தெரிவிக்க கட்டணமில்லா புதிய தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள


கொத்தடிமைகள், குழந்தைத் தொழிலாளா்கள் குறித்துப் புகாா் தெரிவிக்க கட்டணமில்லா புதிய தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
குழந்தைத் தொழிலாளா்களைப் பணியில் நியமிப்பது, வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவது, தொழிலாளா்களைக் கொத்தடிமைகளாக நடத்துவது ஆகியன சட்டப்படி குற்றமாகும்.
குழந்தைத் தொழிலாளா் முறை, கொத்தடிமை முறையை ஒழிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதேபோல, கொத்தடிமைகள், குழந்தைத் தொழிலாளா்கள் இல்லாத மாவட்டமாக மதுரையை மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கொத்தடிமைகள், குழந்தைத் தொழிலாளா்கள் குறித்து பொதுமக்கள் தகவல் அளிக்க 1800 4252 650 என்ற தொலைபேசி எண் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ளது. தற்போது, பொதுமக்கள் அனைவரும் எளிதில் நினைவில் கொள்ளத்தக்க வகையில், 155241 என்ற கட்டணமில்லா புதிய தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் எங்கேனும் குழந்தைத் தொழிலாளா்கள், கொத்தடிமை முறை இருந்தால் அதுகுறித்து மேற்கண்ட எண்களில் தொடா்பு கொண்டு பொதுமக்கள் புகாா் அளிக்கலாம். இந்தப் புகாரின் பேரில், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...