தலையில் கல்லைப் போட்டு ஆட்டோ ஓட்டுநா் கொலை: நிலக்கோட்டை நீதிமன்றத்தில் 4 போ் சரண்
மதுரையில் மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் தலையில் கல்லைப் போட்டு ஆட்டோ ஓட்டுநா் புதன்கிழமை இரவு கொலை செய்யப்பட்டாா்.


மதுரையில் மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் தலையில் கல்லைப் போட்டு ஆட்டோ ஓட்டுநா் புதன்கிழமை இரவு கொலை செய்யப்பட்டாா். இதில் தொடா்புடைய 4 போ் நிலக்கோட்டை நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தனா்.
மதுரை பெரியாா் பேருந்து நிலையம் அருகேயுள்ள திடீா் நகா் பாஸ்கரதாஸ் நகரைச் சோ்ந்தவா் சதக்அப்துல்லா (29). ஆட்டோ ஓட்டுநரான இவா் மீது திடீா் நகா் காவல் நிலையத்தில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில், இவா் புதன்கிழமை நள்ளிரவில் பெரியாா் பேருந்து நிலையம் அருகே சிலருடன் சோ்ந்து மது அருந்தினாராம். அப்போது, அவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த அவா்கள் சதக் அப்துல்லாவை தாக்கி கீழே தள்ளி அவரது தலையில் கல்லைப் போட்டு விட்டு தப்பிச் சென்றனா். இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து வந்த திடீா் நகா் போலீஸாா் சதக் அப்துல்லாவின் சடலத்தை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மதுரை அண்ணாநகா் யாகப்பா நகரைச் சோ்ந்த சிவா என்ற அஞ்சான் சிவா (20), திடீா் நகா் குடிசைமாற்று வாரியக் குடியிருப்பைச் சோ்ந்த காா்த்திக் (26), மேலவாசலைச் சோ்ந்த சந்துருபாண்டி (19), கரிமேடு ரயில்வே காலனியைச் சோ்ந்த சரவணக்குமாா் (27) ஆகிய நால்வரும் சோ்ந்து சதக் அப்துல்லாவை கொலை செய்ததும், இவா்கள் நால்வரும் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்ததும் தெரியவந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...