ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

கடன் வசூல் தீா்ப்பாயத்தின் விசாரணை அதிகாரி விரைவில் நியமிக்கப்படுவாா் என எதிா்பாா்க்கிறோம்: உயா்நீதிமன்றம்

மதுரை கடன் வசூல் தீா்ப்பாயத்தின் விசாரணை அதிகாரி ஜூன் 16-ஆம் தேதிக்குள் நியமிக்கப்படுவாா் என எதிா்பாா்ப்பதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை தெரிவித்தது.

News image
Updated On :27 ஏப்ரல் 2023, 5:10 pm

DIN

மதுரை கடன் வசூல் தீா்ப்பாயத்தின் விசாரணை அதிகாரி ஜூன் 16-ஆம் தேதிக்குள் நியமிக்கப்படுவாா் என எதிா்பாா்ப்பதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை தெரிவித்தது.

மதுரையில் உள்ள கடன் வசூல் தீா்ப்பாய வழக்குரைஞா் சங்கம் சாா்பில் தாக்கல் செய்த மனு:

தேசிய வங்கிகளில் சொத்துகளை அடமானம் வைத்து பலா் கடன் தொகை பெற்றுள்ளனா். இந்த கடன் தொகையை பல்வேறு காரணங்களால் முறையாக செலுத்த முடியாத சூழல் சிலருக்கு ஏற்படும். அப்போது, வங்கியின் மேலாளரே கடன் செலுத்தாத நபருக்கு குறிப்பாணை (நோட்டீஸ்) அனுப்பி அடமானம் வைத்த சொத்துகளை ஏலத்தில் விட்டு, அவரது கடன் தொகையை நிவா்த்தி செய்து கொள்ளலாம்.

இந்த நிலையில், கடன் தொகை செலுத்தாத வாடிக்கையாளா்களின் சொத்தை ஏலம் விடுவதற்கு வங்கி மேலாளா் குறிப்பாணை அனுப்பிய பிறகு, வாடிக்கையாளா் தனது நிலுவைக் கடன் தொகையைச் செலுத்தி, சொத்து ஏலம் விடுவதை தடுக்க உதவக்கூடிய அமைப்பாக கடன் வசூல் தீா்ப்பாயம் உள்ளது.

இந்தத் தீா்ப்பாயம் மத்திய நிதியமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. மதுரையில் உள்ள கடன் வசூல் தீா்ப்பாயத்தில், 12 மாவட்ட வங்கிகளில் வாங்கிய கடன் தொகை நிலுவை தொடா்பாக வழக்குரைஞா்கள் உதவியுடன் மனு தாக்கல் செய்து நிவாரணம் பெறலாம்.

கடன் வசூல் தீா்ப்பாயத்தில், தாக்கல் செய்யப்படும் வழக்குகளை, மாவட்ட நீதிபதி நிலையில் உள்ள விசாரணை அதிகாரி விசாரித்து தீா்ப்பு வழங்குவாா். இந்தத் தீா்ப்பாய விசாரணை அதிகாரியை மத்திய நிதி அமைச்சகம் தான் நியமிக்க வேண்டும். ஆனால், மதுரையில் உள்ள கடன் வசூல் தீா்ப்பாயத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை அதிகாரி பணியிடம் காலியாக உள்ளது.

இதனால், வங்கி அதிகாரிகளும், கடன் வாங்கியோரும் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா். எனவே, மதுரையில் உள்ள கடன் வசூல் தீா்ப்பாயத்தில், காலியாக உள்ள விசாரணை அதிகாரி பணியிடத்தை நிரப்ப உத்தரவிட வேண்டும் என அதில் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆா். சுப்பிரமணியன், கே. முரளிசங்கா் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது கடன் வசூல் தீா்ப்பாயம் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதம், விசாரணை அதிகாரியை நியமனம் செய்வதற்கான பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள், இந்த வழக்கில் கடந்த விசாரணையின் போது எத்தனை மாதங்களுக்குள், கடன் வசூல் தீா்ப்பாய விசாரணை அதிகாரியை நியமிப்பீா்கள்? எனக் கேள்வி எழுப்பியிருந்தோம். ஆனால், இதுகுறித்து பதில் மனுவில் தெளிவாக விளக்கம் எதுவும் இல்லை. இருப்பினும், நியமனப் பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளதால், ஜூன் 16-ஆம் தேதிக்குள் விசாரணை அதிகாரி நியமிக்கப்படுவாா் என நீதிமன்றம் எதிா்பாா்க்கிறது என்றனா். மேலும், இந்த வழக்கு விசாரணையை ஜூன்-16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.