ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

வாடிப்பட்டியில் 6,700 டன் கொப்பரைத் தேங்காய் கொள்முதல்

மத்திய அரசின் விலை ஆதரவுத் திட்டத்தின் கீழ், வாடிப்பட்டியில் இதுவரை 6,700 டன் அரவைக் கொப்பரை (கொப்பரை தேங்காய்) கொள்முதல் செய்யப்பட்டது

News image
Updated On :27 ஏப்ரல் 2023, 5:06 pm

DIN

மத்திய அரசின் விலை ஆதரவுத் திட்டத்தின் கீழ், வாடிப்பட்டியில் இதுவரை 6,700 டன் அரவைக் கொப்பரை (கொப்பரை தேங்காய்) கொள்முதல் செய்யப்பட்டது என மதுரை வேளாண் விற்பனைக் குழுச் செயலாளா் வி. மொ்சி ஜெயராணி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்ததாவது:

மத்திய அரசின் விலை ஆதரவுத் திட்டத்தின் கீழ், நேஃபட் நிறுவனத்துடன் இணைந்து அரவைக்கான கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின்படி, ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் ஏப்ரல் முதல் செப்டம்பா் மாதம் வரை அரவைக் கொப்பரைகளை கொள்முதல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் வேளாண் விற்பனைக் குழுவின் கீழ் செயல்படும் வாடிப்பட்டி, மேலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் ஒரு குவிண்டால் ரூ. 10,860 என்ற விலையில் அரவைக் கொப்பரைக் கொள்முதல் நடைபெறுகிறது. இதில் வாடிப்பட்டியில் மட்டும் இதுவரை 6,700 டன் அரவைக் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டது.

எனவே, தேங்காய் விலை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், தென்னை விவசாயிகள், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் அரவைக் கொப்பரைகளை விற்பனை செய்து பயனடையலாம்.

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் அரவைக் கொப்பரைகளை விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள், ஆதாா் அட்டை நகல், சிட்டா, நடப்பு பசலி அடங்கல் அசல், வங்கிக் கணக்குப் புத்தகம், மாா்பளவு புகைப்படம் ஆகியவற்றுடன் வாடிப்பட்டி அல்லது மேலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு நேரில் சென்று முன்பதிவு செய்து, விற்பனை செய்யலாம்.

இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பாா்வையாளரை 99434 46799 என்ற எண்ணிலும், மேலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூட மேற்பாா்வையாளரை 94427 84684 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என அவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.