ஸ்ரீவில்லி., அருகே 160 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: 2 போ் கைது
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 160 கிலோ ரேஷன் அரிசியை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனா்.


ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 160 கிலோ ரேஷன் அரிசியை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா்- ராஜபாளையம் நெடுஞ்சாலையில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த ஆட் டோவை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் நான்கு மூட்டைகளில் 160 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து ரேஷன் அரிசி மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்த போலீஸாா், மங்காபுரம் ராமா் மகன் சுந்தரமூா்த்தி (41), முத்துக்கருப்பன் மகன் தமிழரசன் (22) ஆகியோரைக் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...