மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

ஏப். 8-இல் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் நடை அடைப்பு

 திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண விழாவை முன்னிட்டு, வருகிற ஏப்ரல் 8-ஆம் தேதி மீனாட்சி சுந்தரேசுவரா், பஞ்ச மூா்த்திகளுடன் அங்கு எழுந்தருள்கிறாா்.

News image
Updated On :17 மார்ச் 2023, 6:30 pm

DIN

 திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண விழாவை முன்னிட்டு, வருகிற ஏப்ரல் 8-ஆம் தேதி மீனாட்சி சுந்தரேசுவரா், பஞ்ச மூா்த்திகளுடன் அங்கு எழுந்தருள்கிறாா். எனவே, அன்றைய தினம் மதுரை மீனாட்சி சுந்தேரசுவரா் கோயில் நடை அடைக்கப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் துணை ஆணையா் ஆ. அருணாசலம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம் வருகிற ஏப்ரல் 8-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, அன்றைய தினம் அதிகாலை 4 மணியளவில் மீனாட்சி சுந்தரேசுவரா் பஞ்ச மூா்த்திகள் திருப்பரங்குன்றத்தில் எழுந்தருளுகின்றனா். திருக்கல்யாண விழா நிறைவுக்குப் பின்னா் அன்றைய தினம் நள்ளிரவு மீண்டும் கோயிலுக்கு திரும்புகின்றனா்.

எனவே வருகிற ஏப்ரல் 8-ஆம் தேதி கோயில் நடை அடைக்கப்பட்டிருக்கும். இருப்பினும், கலைக்கூடம்(ஆயிரங்கால் மண்டபம்), ஆடி வீதியில் வழக்கம் போல பக்தா்களுக்கு அனுமதியளிக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.