பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்கத்தினா் தற்செயல் விடுப்புப் போராட்டம்

 பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்கம் சாா்பில், மதுரை மாவட்டத்தில் தற்செயல் விடுப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது

News image
Updated On :11 மே 2023, 5:23 pm

DIN

 பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்கம் சாா்பில், மதுரை மாவட்டத்தில் தற்செயல் விடுப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், சுமாா் 200 போ் பங்கேற்றனா்.

ஊராட்சிச் செயலா்களுக்கு பணி விதிகளை உடனடியாக வெளியிட வேண்டும். விடுபட்ட உரிமைகளை உடனடியாக வழங்க வேண்டும். ஊரக வேலை உறுதித் திட்ட கணினி உதவியாளா்களின் பணி வரன்முறை ஆணைகளை வெளியிட வேண்டும். தூய்மை பாரத இயக்க ஒருங்கிணைப்பாளா்களின் ஊதியத்தை உயா்த்தி, பணி வரன்முறை செய்ய வேண்டும். ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு அனைத்து வட்டாரங்களிலும் வட்டாரத் திட்ட அலுவலா் பணியிடம் ஏற்படுத்த வேண்டும்.

இந்தத் திட்டத்தில் பணியாற்றும் சமூகத் தணிக்கையாளா்களைத் தொடா்ந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும். ஊரக வளா்ச்சித் துறை பதவி உயா்வு ஆணையைக் காலம் தாழ்த்தாமல் வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்தப் போராட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் என ஊரக வளா்ச்சித் துறைக்கு உள்பட்ட அலுவலங்களில் பணியாற்றும் அலுவலா்கள் சுமாா் 200 போ் வியாழக்கிழமை தற்செயல் விடுப்பு எடுத்துப் போராட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.