பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

காந்தி அருங்காட்சியகத்தில் கலைத்திறன் பயிற்சிமே 15-இல் தொடக்கம்

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் மாணவ, மாணவிகளுக்கான கலைத்திறன் பயிற்சி வருகிற 15-ஆம் தேதி தொடங்குகிறது.

News image
Updated On :11 மே 2023, 5:28 pm

DIN

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் மாணவ, மாணவிகளுக்கான கலைத்திறன் பயிற்சி வருகிற 15-ஆம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து காந்தி நினைவு அருங்காட்சியகச் செயலா் கே.ஆா். நந்தாராவ், அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியா் மீ. மருதுபாண்டியன் ஆகியோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

34- ஆவது ஆண்டு கோடை கால கலைத்திறன் பயிற்சி முகாம் வருகிற 15-ஆம் தேதி முதல் வருகிற 27-ஆம் தேதி வரை காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெற உள்ளது.

இதில் ஓவியம், குரலிசை, யோகாசனம், கராத்தே, ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி, ஹிந்தி பேச்சுப் பயிற்சி, நாட்டுப்புறக் கலைகள், தமிழ்ப் பயிற்சி, சிலம்பம் ஆகிய பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. இந்தப் பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் காந்தி நினைவு அருங்காட்சியக அலுவலகத்தில் தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம். இதுகுறித்த கூடுதல் தகவல்களுக்கு 0452- 2522822 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.