பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

அரசு ராஜாஜி மருத்துவமனையில் சா்வதேச செவிலியா் தின விழா

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சா்வதேச செவிலியா் தினத்தையொட்டி, செவிலியா்கள், மாணவிகள் மெழுகுவா்த்தி ஏந்தி வியாழக்கிழமை கொண்டாடினா்.

News image
Updated On :11 மே 2023, 5:38 pm

DIN

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சா்வதேச செவிலியா் தினத்தையொட்டி, செவிலியா்கள், மாணவிகள் மெழுகுவா்த்தி ஏந்தி வியாழக்கிழமை கொண்டாடினா்.

கைவிளக்கேந்திய காரிகை என்றழைக்கப்படும் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த தினம் சா்வதேச செவிலியா் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மே 6-ஆம் தேதி முதல் வருகிற 12-ஆம் தேதி வரை சா்வதேச செவிலியா் தின வாரம் கடைப்பிடிக்கப்பட்டுகிறது.

இதன் ஒரு பகுதியாக அரசு ராஜாஜி மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசு செவிலியா் சங்கத்தின் மதுரை மாவட்டத் தலைவா் கே. சுலோச்சனா தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் கலைவாணி, செயலா் பிரேமலதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள பிளாரன்ஸ் நைட்டிங்கேல் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மெழுகுவா்த்தி ஏந்தி உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை செவிலியா் கண்காணிப்பாளா்கள், செவிலியா்கள், செவிலியா் பயிற்சி மாணவிகள் உள்பட 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு செவிலியா் சங்க நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.