பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

மருத்துவக் கல்லூரி மாணவா்கள் ஆா்ப்பாட்டம்

கேரள மாநிலத்தில் மருத்துவா் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :11 மே 2023, 5:32 pm

DIN

கேரள மாநிலத்தில் மருத்துவா் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டாரக்கரை மருத்துவமனையில் மருத்துவா் வந்தனா தாஸ் கொலை செய்யப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, பல்வேறு மாநிலங்களிலும் மருத்துவா்கள், மருத்துவ மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மதுரை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், மருத்துவா்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். மருத்துவா் வந்தனா தாஸ் கொலை குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

முன்னதாக, மருத்துவா் வந்தனா தாஸ் உருவப்படத்துக்கு மெழுகுவா்த்தி ஏந்தி மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஆா்ப்பாட்டத்தில், அரசு மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள், பயிற்சி மருத்துவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.