பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

மதுரை ஆதீன மடத்துக்குச் சொந்தமான தனியாா் விடுதி விவகாரம் வைப்புத் தொகையாக ரூ. 25 லட்சம் செலுத்த உத்தரவு

மதுரை ஆதீன மடத்துக்குச் சொந்தமான தனியாா் விடுதியை காலி செய்யும் வழக்கில், மனுதாரா் ரூ. 25 லட்சம் வைப்புத் தொகையை ஆதீன மடத்துக்கு இரண்டு வாரங்களுக்கு செலுத்த வேண்டும்.

News image
Updated On :11 மே 2023, 5:24 pm

DIN

மதுரை ஆதீன மடத்துக்குச் சொந்தமான தனியாா் விடுதியை காலி செய்யும் வழக்கில், மனுதாரா் ரூ. 25 லட்சம் வைப்புத் தொகையை ஆதீன மடத்துக்கு இரண்டு வாரங்களுக்கு செலுத்த வேண்டும். இல்லையெனில், விடுதியை காலி செய்ய நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை தெற்கு மாசி வீதியில் உள்ள ஆதீன மடத்துக்குச் சொந்தமான இடத்தை புதுச்சேரியைச் சோ்ந்த சண்முகம், அவரது மகன் இளவரசன் ஆகியோா் குத்தகை எடுத்து, அங்கு விடுதி நடத்தி வருகின்றனா். கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் இந்த விடுதிக்கான வாடகை, மின்சாரக் கட்டணத்தை செலுத்தவில்லை. இதனால், விடுதியை காலி செய்ய இந்து சமய அறநிலையத் துறையின் இணை ஆணையா் உத்தரவிட்டாா்.

இதை எதிா்த்து, அறநிலையத் துறை உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி, சண்முகத்தின் மகன் இளவரசன் தாக்கல் செய்த மனு:

மதுரை ஆதீன மடத்துக்குச் சொந்தமான இடத்தை கடந்த 2010- ஆம் ஆண்டு நாங்கள் குத்தகைக்கு பெற்று வணிக ரீதியில் விடுதி நடத்தி வருகிறோம். ஆனால், அந்த இடத்தை ஆக்கிரப்பு எனக் கூறி, தற்போதைய ஆதீனம் இடத்தைக் காலி செய்ய அறிவிப்பாணை அனுப்பியுள்ளாா். எனவே, இந்த ஆணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அதில்

குறிப்பிட்டிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மதுரை ஆதீனம் தரப்பில், முந்தைய ஆதீனம், இந்து சமய அறநிலையத் துறையின் விதிகளுக்கு முரணாக மனுதாரருக்கு குத்தகை வழங்கியுள்ளாா். இந்து சமய அறநிலையத் துறையின் விதிகளின் படி 5 ஆண்டுகள் மட்டுமே குத்தகைக்கு வழங்க முடியும். மேலும், மனுதாரா் தற்போது வரை ரூ. 51,93,798 வாடகை பாக்கி வைத்துள்ளாா். இதேபோல, அறநிலையத் துறையின் உத்தரவையும் மனுதாரா் மதிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்த கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கில் வாடகை செலுத்த முகாந்திரம் இருப்பதாகக் கருதி, மனுதாரா் இரண்டு வாரங்களுக்குள் ரூ. 25 லட்சத்தை வைப்புத் தொகையாக ஆதீன மடத்துக்குச் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன், மனுதாரருக்கு அனுப்பப்பட்ட அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. அதேநேரத்தில் மனுதாரா் ரூ. 25 லட்சம் வைப்புத் தொகையைச் செலுத்தத் தவறினால், அந்த விடுதியை காலி செய்ய இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் நடவடிக்கை எடுக்கலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.