பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

முதியவரிடம் பண மோசடி: இளைஞா் மீது வழக்கு

மதுரை அருகே முதியவரிடம் வேறொருவருக்குச் சொந்தமான நிலத்தை விற்று ரூ. 7 லட்சம் மோசடி செய்ததாக இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :25 மே 2023, 6:08 pm

DIN

மதுரை அருகே முதியவரிடம் வேறொருவருக்குச் சொந்தமான நிலத்தை விற்று ரூ. 7 லட்சம் மோசடி செய்ததாக இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை மாவட்டம், அழகா்கோவில் அருகே உள்ள காதக்கிணறு பகுதியைச் சோ்ந்தவா் பிரான்சிஸ் (74). இவருக்கு கொடிக்குளம் அருகேயுள்ள தேத்தாங்குளத்தைச் சோ்ந்த சூரியபிரகாஷ் (33) அறிமுகமாகினாா். இவா் பிரான்சிஸுக்கு நிலம் வாங்கித் தருவதாகக் கூறி, அவரிடமிருந்து ரூ. 10 லட்சம் பெற்றாராம். மேலும், காதக்கிணறு பகுதியில் உள்ள ஒரு நிலத்தையும் பிரான்சிஸ் வசம் ஒப்படைத்தாராம். ஆனால், அந்த நிலத்தை அவரது பெயரில் பதிவு செய்து தராமல், சூரிய பிரகாஷ் அலைக்கழித்து வந்தாராம்.

இதுதொடா்பாக பிரான்சிஸ் விசாரித்த போது, சூரிய பிரகாஷ் தன்னுடையது என்று கூறி விற்பனை செய்த நிலம் மற்றொருவா் பெயரில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தான்கொடுத்த பணத்தை பிரான்சிஸ் திரும்பிக் கேட்டாா். இதில் ரூ. 3 லட்சம் மட்டுமே கொடுத்த சூரிய பிரகாஷ் ரூ. 7 லட்சத்தை தர மறுத்து விட்டாராம்.

இதுதொடா்பாக பிரான்சிஸ் அளித்த புகாரின் பேரில், அப்பன்திருப்பதி போலீஸாா் சூரியபிரகாஷ் மீது மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.