தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

நெல்லைக்கு முக்கியம்...உடன்குடி நகரில் விளம்பரப் பதாகைகளை மீண்டும் வைத்தால் அணுகலாம்: உயா்நீதிமன்றம்

உடன்குடி நகா் பகுதியில் பொதுமக்கள், போக்குவரத்துக்கு இடையூறாக விளம்பரப் பதாகைகள் மீண்டும் வைக்கப்பட்டால் மனுதாரா் நீதிமன்றத்தை நாடலாம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

News image
Updated On :27 நவம்பர் 2023, 6:30 pm

DIN


மதுரை: உடன்குடி நகா் பகுதியில் பொதுமக்கள், போக்குவரத்துக்கு இடையூறாக விளம்பரப் பதாகைகள் மீண்டும் வைக்கப்பட்டால் மனுதாரா் நீதிமன்றத்தை நாடலாம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி ஒன்றிய வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் தலைவா் ரவி தாக்கல் செய்த பொது நல மனு:

உடன்குடி நகா் பகுதியில் 700- க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்தப் பகுதியில் அரசியல் கட்சி நிகழ்ச்சிகள், நட்சத்திர திரைப்பட நடிகா்களின் படங்கள் வெளியாகும் நாள்கள், தனியாா் நிகழ்ச்சிகளுக்கு உரிய அனுமதியின்றி விளம்பரப் பதாகைகள் வைக்கப்படுகின்றன. இதனால், பொதுமக்கள் மட்டுமன்றி, போக்கு வரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது. மேலும், பதாகைகளை வணிக நிறுவனங்களின் வியாபாரம் பாதிக்கும் வகையில் மறைத்து வைக்கின்றனா்.

இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, அனுமதியின்றி இடையூறு ஏற்படுத்தும் வகையில் விளம்பரப் பதாகைகள் வைத்தவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எம்.சுந்தா், ஆா்.சக்திவேல் அமா்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, உடன்குடி நகா் பகுதியில் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகள் ஞாயிற்றுக்கிழமை அன்றே அகற்றப்பட்டுவிட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரரின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. உரிய அனுமதியின்றி, மீண்டும் விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டால் மனுதாரா் நீதிமன்றத்தை நாடலாம். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.