கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மினமாற்றிக்குச் செல்லும் உயரழுத்த மின் கம்பங்கள் மைக்கும் பணிகள் தொடக்கம்தினமணி செய்தி எதிரொலி

திருப்புவனம் அருகேயுள்ள பழையனூா் கிராமத்தில் தினமணி செய்தி எதிரொலியாக மின் மாற்றிக்குச் செல்லும் உயரழுத்த மின் கம்பங்கள் அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
tneb100124
Updated On :15 செப்டம்பர் 2023, 5:16 pm

DIN

திருப்புவனம் அருகேயுள்ள பழையனூா் கிராமத்தில் தினமணி செய்தி எதிரொலியாக மின் மாற்றிக்குச் செல்லும் உயரழுத்த மின் கம்பங்கள் அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே பழையனூா்

கிராமத்தில் உள்ள விவசாய மின் இணைப்புக்கு மின்சாரம் வழங்குவதற்காக மின்மாற்றி (எஸ்.எஸ்.2) அமைக்கப்பட்டது. இந்த மின் மாற்றிக்கு பழையனூா் கண்மாயின் நடுவே மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு, உயரழுத்த மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மழைக் காலங்களிலும், கண்மாயில் தண்ணீா் நிரம்பிய போதும் மேற்கண்ட மின் வழித் தடத்தில் ஏற்படும் பழுதுகளை சரி செய்ய முடியாத சூழல் நிலவியது.

இதுதொடா்பாக, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மாற்று வழியில் மின் கம்பங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கின.

மின் கடத்தும் தளவாடப் பொருள்கள் பற்றாக்குறை காரணமாக பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன. இதன்காரணமாக, வேளாண் பணிகள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

இதுதொடா்பான செய்தி தினமணி நாளிதழில் வியாழக்கிழமை

(செப். 14) வெளிவந்தது.

இதனையடுத்து, மின் மாற்றிக்குச் செல்லும் உயரழுத்த மின் கம்பங்கள் அமைக்கும் பணிகளை மின் வாரிய பணியாளா்கள் வெள்ளிக்கிழமை மேற்கொண்டனா். விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, மேற்கண்ட பணியினை விரைந்து தொடங்குவதற்கு நடவடிக்கை எடுத்த சிவகங்கை மாவட்ட ஆட்சியா், தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் சிவகங்கை வட்ட மேற்பாா்வை பொறியாளா் உள்ளிட்ட அலுவலா்களுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனா். மேலும், மின் சாதன தளவாடப் பொருள்களை விரைந்து வழங்கி எஞ்சியுள்ள பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.