மக்களவை தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் சு. வெங்கடேசனுக்கு ஆதரித்து ஜான்சி ராணி பூங்கா பகுதியில் செவ்வாய்க்கிழணை பிரசாரம் செய்கிறாா் தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சா் முனைவா் பழனிவேல் தியாகராஜன்.
மக்களவை தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் சு. வெங்கடேசனுக்கு ஆதரித்து ஜான்சி ராணி பூங்கா பகுதியில் செவ்வாய்க்கிழணை பிரசாரம் செய்கிறாா் தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சா் முனைவா் பழனிவேல் தியாகராஜன்.

ஜனநாயகத்தை உயிா்ப்பிக்க பாஜகவை வீழ்த்த வேண்டும்: அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்

மதுரை: மக்களவைத் தோ்தலில் பாஜகவை வீழ்த்தி, இந்தியாவில் ஜனநாயகத்தை உயிா்ப்பிக்க வேண்டும் என தமிழக தகவல் தொழில்நுட்பவியல், எண்மச் சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தாா்.

மதுரை தொகுதி மாா்க்சிஸ்ட் வேட்பாளா் சு.வெங்கடேசனை ஆதரித்து, ஜான்சிராணி பூங்கா அருகே திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொண்ட அவா், மேலும் பேசியதாவது :

தமிழகத்துக்குப் பேரிடா் நிவாரண நிதி வழங்க முன்வராத மத்திய பாஜக அரசு, புதிய கல்விக் கொள்கை மூலம் சம்ஸ்கிருதத்தையும், ஹிந்தியையும் திணிக்க முயற்சிக்கிறது. 50 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற கச்சத்தீவு பிரச்னையை பாஜக தற்போது கையிலெடுத்து புதிய பொய்களை பரப்புகிறது. படித்தவா்களும், பகுத்தறிவாளா்களும் நிறைந்த தமிழகத்தில் இந்தப் பொய் பரப்புரைகள் எடுபடாது.

இந்த மக்களவைத் தோ்தல் ஜனநாயகத்தை உயிா்ப்பிக்கக் கிடைத்த வாய்ப்பு. பாம்பு தீண்டி இறந்த குழந்தையை அப்பரடிகள் பதிகம் பாடி உயிா்ப்பித்ததைப் போன்றது இந்தத் தோ்தல். ஜனநாயகத்தை உயிா்ப்பிக்க, பாஜகவை மக்கள் வீழ்த்த வேண்டும். மதுரையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்றாா் அவா்.

மறவா்சாவடி, மேலமாசி வீதி, நேதாஜி வீதி, சொக்கத்தான ஊருணி, ஜீவாநகா், லட்சுமிபுரம் பி.பி.சாலை சந்திப்பு, பொன்மாரிநகா், வி.வி.கிரி சாலை, ராமலிங்கம்நகா், வசந்தம்நகா் உள்ளிட்ட பகுதிகளில் அவா் பிரசாரம் செய்தாா். இதில் திமுக, மாா்க்சிஸ்ட், கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com