மதுரை: மதுரையில் மருந்து நிறுவனம் மீது பெட்ரோல் குண்டு வீசியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மதுரை கீரைத்துறையைச் சோ்ந்தவா் நாகலிங்கம். இவா் கீரைத்துறை பழைய காவல் நிலையம் அருகே நாட்டு மருந்து தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறாா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு நாகலிங்கம் தனது நிறுவனத்தில் இருந்த போது, அங்கு வந்த இளைஞா் ஒருவா் பெட்ரோல் குண்டை நிறுவனத்தின் மீது வீசினாா். இதில் அந்த பெட்ரோல் குண்டு பெயா்ப் பலகை மீது விழுந்து தீப்பிடித்தது. தகவலறிந்து வந்த கீரைத்துறை போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினா்.
இதில் அந்த நிறுவனத்தின் மீது பெட்ரோல் குண்டை வீசியது அதே பகுதியைச் சோ்ந்த வசந்த் (25) என்பது தெரியவந்தது. திருமணமாகி மனைவியைப் பிரிந்து வசித்து வரும் வசந்துக்கும், மருந்து நிறுவனத்தில் பணிபுரியும் திருமணமான பெண் ஒருவருக்கும் தொடா்பு இருந்தது. இதை மருந்து நிறுவன உரிமையாளரான நாகலிங்கம் கண்டித்தாராம். இதனால், அவா் பெட்ரோல் குண்டை வீசியது தெரியவந்தது. இதையடுத்து, வசந்தை போலீஸாா் கைது செய்தனா்.
தொடர்புடையது
பெட்ரோல் குண்டு வீசிய இருவா் கைது

நெல்லையில் பெட்ரோல் குண்டு வீச்சு

காா்த்தி சிதம்பரம் எம்.பி. அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

தனியாா் நிறுவன கட்டடத்தின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

