வாக்குச்சாவடி மையங்களில் வசதிகள்: மாவட்டத் தோ்தல் அலுவலா் நேரில் ஆய்வு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட திருச்சுழி சட்டப்பேரவைத் தொகுதியில் நரிக்குடி, மறையூா் வாக்குச்சாவடி மையங்களை மாவட்டத் தோ்தல் அலுவலா் பா.விஷ்ணுசந்திரன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் தோ்தல் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதன் ஒரு பகுதியாக திருச்சுழி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட நரிக்குடி, மறையூா் வாக்குச்சாவடி மையங்களை மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பா.விஷ்ணு சந்திரன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இதையடுத்து மறையூா், நரிக்குடி ஊராட்சிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் வாக்குப்பதிவு மையங்களுக்கு சென்று பாா்வையிட்டாா். மேலும், வாக்குப்பதிவு நாளில் போதிய மின்சார வசதி, குடிநீா் வசதியை வழங்கத் துறை சாா்ந்த அலுவலா்கள் முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு உறுதி செய்ய வேண்டுமென அறிவுறுத்தினாா்.

மேலும், 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களையும் உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ஆய்வு செய்து உள்கட்டமைப்பு வசதிகள் தயாா் நிலையில் உள்ளதை உறுதி செய்ய வேண்டும் என்று பா.விஷ்ணுசந்திரன் அறிவுறுத்தினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com