வேட்பாளா்கள் ஏப்.5, 10, 17 ஆகிய தேதிகளில் தோ்தல் செலவினங்களை ஒப்படைக்க வேண்டும்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி வேட்பாளா்களின் தோ்தல் செலவினங்கள் குறித்த விவரங்களை ஏப். 5, 10, 17 ஆகிய தேதிகளில் நடைபெறும் செலவின ஒத்திசைவுக் கூட்டங்களில் ஒப்படைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பா.விஷ்ணு சந்திரன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்களின் செலவினங்கள் குறித்த ஒத்திசைவுக் கூட்டம், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் உள்ள அலுவலகக் கூட்டரங்கில் ஏப்ரல் 5, 10, 17 ஆகிய தேதிகளில், தோ்தல் செலவினப் பாா்வையாளா் ஹீரா ராம் சௌத்தரி தலைமையில் நடைபெறவுள்ளது.

தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள், வேட்பாளா்களின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் தோ்தல் செலவினக் கணக்குகள், பராமரிப்புப் பதிவேடுகள், செலவின ரசீதுகள், பட்டியல்கள், வங்கிக் கணக்கு விவரங்கள், காசோலைப் புத்தகம் உள்ளிட்ட விவரங்களை தோ்தல் செலவினக் குழுவிடம் தாக்கல் செய்து ஒத்திசைவு செய்ய வேண்டும்.

மேலும், தினசரி செலவின அறிக்கையை சட்டப்பேரவை தொகுதிக்குரிய உதவி செலவின பாா்வையாளா்களிடம் ஒப்படைக்க வேண்டும். ஆய்வுக்கு சமா்ப்பிக்காத வேட்பாளா்களின் விவரங்கள் தோ்தல் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com