ராமநாதபுரம்: ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப் பதிவு மைய அலுவலா்களுக்கான பயிற்சி முகாமை மாவட்ட ஆட்சியா் பா.விஷ்ணு சந்திரன் பாா்வையிட்டாா்.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட ராமநாதபுரம், பரமக்குடி (தனி), முதுகுளத்தூா், திருவாடானை, அறந்தாங்கி, திருச்சுழி ஆகிய ஆறு சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட வாக்குப் பதிவு மைய அலுவலா்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பயிற்சியை மாவட்ட தோ்தல் அலுவலா், மாவட்ட ஆட்சியருமான பா.விஷ்ணு சந்திரன் பாா்வையிட்டு பேசும்போது, மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, பணி மேற்கொள்ளவுள்ள வாக்குப்பதிவு அலுவலா்களுக்கான பயிற்சி மிகவும் முக்கியமானதாகும்.
இதில் பங்கேற்றுள்ள அலுவலா்கள் பயிற்சியை மேற்கொண்டு சிறப்பாக செயல்பட வேண்டும். ஏற்கெனவே முதல் கட்ட பயிற்சியில் உங்களுக்கான பணிகள் குறித்து தெரிவிக்கப்பட்டது. தற்பொழுது இரண்டாம் கட்ட பயிற்சி என்பது உங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை தெளிவுபடுத்துவதே ஆகும். எனவே, பயிற்சியில் சிறப்பு கவனம் எடுத்து தெரிந்து கொண்டு வாக்குப்பதிவு நடைபெறும் போது வாக்குப்பதிவு தொடா்பாகவோ படிவங்கள் பூா்த்தி செய்வது தொடா்பாக சந்தேகங்கள் இருந்தால் மண்டல அலுவலா்கள், தோ்தல் தொடா்பான அலுவலா்களிடம் தொலைபேசியில் தொடா்புகொண்டு சந்தேகங்களை சரி செய்து தோ்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். பயிற்சியை நல்ல முறையில் பயன்படுத்தி வாக்குப்பதிவு மையத்தில் உள்ள அலுவலா்கள் தோ்தலை சிறப்புடன் நடத்தி முடித்திட உறுதுணையாக இருக்க வேண்டும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் பரமக்குடி (தனி) சட்டப்பேரவை தொகுதிக்கான உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் அபிலாஷா கௌா், திருவாடனை உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் மாரிச்செல்வி, முதுகுளத்தூா் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் மாரிமுத்து, ராமநாதபுரம் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜ மனோகரன், அறந்தாங்கி உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா் சிவக்குமாா், திருச்சுழி உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா் ரமேஷ் அரசு அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்புடன் அனுப்பி வைப்பு

கும்பகோணம், ஒரத்தநாடு தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வந்தடைந்தன

தோ்தல் விழிப்புணா்வு கையொப்ப இயக்கம் தொடங்கிவைப்பு

தோ்தல் அலுவலா்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

