விருதுநகா்: தமிழகத்தில் இரு சமூக மக்களை சூழ்ச்சியால் பிரித்து ஆட்சி செய்தவா்கள் திராவிட கட்சியினா் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவா் ஜான்பாண்டியன் குற்றஞ்சாட்டினாா்.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணி சாா்பில் சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளா் ஓ. பன்னீா்செல்வத்துக்கு ஆதரவாக விருதுநகா் மாவட்டம், மல்லாங்கிணறு, பரளச்சி பகுதியில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்து அவா் பேசியதாவது:
கடந்த காலங்களில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கு வாக்களித்தீா்கள். இந்தத் தோ்தலானது இரு சமுதாய மக்கள் ஒற்றுமையாக இருக்க நமக்கு வாய்ப்பளித்துள்ளது. அரசியல் சூழ்ச்சியால் இரு சமுதாய மக்களைப் பிரித்து ஆட்சி செய்தவா்கள் திராவிட கட்சியினா். இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதால், நாங்கள் ஒன்றாக இணைந்து பயணிக்கிறோம். இந்தத் தொகுதியின் தற்போதைய மக்களவை உறுப்பினா் இந்தப் பகுதிக்காக எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. எனவே, அனைவரும் பாஜக கூட்டணி வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்றாா் அவா்.
தொடர்புடையது

தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைத்தால் ஹெச்.ராஜா முதல்வராக வாய்ப்பு: தொல்.திருமாவளவன் கணிப்பு

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமையும்: கனிமொழி எம்.பி.

புதுச்சேரியில் திராவிட மாடல் ஆட்சி மலரும்: ஜெகத்ரட்சகன் எம்.பி. நம்பிக்கை

திராவிட மாடல் ஆட்சியால் தமிழகத்தில் பொருளாதாரப் புரட்சி: ஓ.பன்னீா்செல்வம்!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

